எனதிரிமங்கலம் பகுதியில் தடுப்பு அணையின் கரைகள் உடைந்தது-ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள பெண்ணையாற்றில் தடுப்பணை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தரம் இன்றி கட்டப்பட்டதால், அணை உடைந்தது. தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த மழை, சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீராலும் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் என திரிமங்கலம் பகுதியில் உள்ள வெண்ணையாறு கரையில் விரிசல் ஏற்பட்டு நேற்று திடீரென உடைந்தது. தற்போது கூடுதலாக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலோ, அதிகமழை பெய்தாலோ ஏற்படும் வெள்ளத்தால், மழை நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.  பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக இப்பகுதியினை கண்காணிக்கும் பணியாளர்களை நியமிக்கவில்லை. ஏற்கனவே இது போன்ற சூழ்நிலையில் பணியாளர்கள் இல்லாததால் தடுப்பு அணையின் உடைப்பை உடனே தடுக்க முடியவில்லை. தற்போதாவது அணையில் ஏற்பட்டுள்ள அணைக்கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து  தண்ணீர் வீடுகளுக்குள் உள்ளே செல்ல விடாமல் காவல்துறை பாதுகாப்பும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு