எதிர்வரும் ஜல்லிக்கட்டில் காளைகளை களமிறக்கத் தீவிர முயற்சி: கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்கள் குழு அமைத்து செயல்பாடு

மதுரை : மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை என்பது பலரும் அறிந்தது. ஆனால் இந்த விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்கள் சேர்த்து காளை வாங்கி வளர்த்து வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. உழவர் திருநாள் ஆன பொங்கலை ஒட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமான நிலையில், தை முதல் தேதியான பொங்கல் தினத்தன்று அமயபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், தை மூன்றாம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அமர்க்களப்படும். இதற்கவே பலர் காலைகளை பெற்று குழந்தைகள் போல பாதுகாத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு விழா நெருங்கும் நேரத்தில் இவர்கள் இந்த காளைகளுக்கு வாரத்தில் மூன்று நாட்க்கள் நீச்சல் பியற்சி, நடை பியற்சி, ஓட்ட பியற்சி, மற்றும் உரிப்பாய்ச்சுதல் என அணைத்து பியற்சிகளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். இது ஒரு பக்கம் என்றாலும் வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி, சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களது சொந்த உழைப்பில் காளைகளை வாங்கி தயார் படுத்தி வருகின்றனர். இதற்கென ஒரு குழு அமைத்து பகுதிநேர வேளைக்கு செல்வதாக பெருமை தெரிவிக்கின்றனர். இந்த காளைகளுக்கு நாள்தோறும் பச்சை அரிசி, வந்தவெள்ளம், பேரீச்சம்பழம், தேங்காய், பருத்தி, புண்ணாக்கு, என போஷாக்கு நிறைந்த உணவுகள் அவசியம், இல்லை எனில் களத்தில் ஜெயிப்பது கடினம், இதற்காக நாள்தோறும் சுமார் 1000 ரூபாய் தேவைப்படுவதாகவும் இதற்காகவே மாலை நேரத்தில் வேலைக்கு செல்வதாகவும் கூறுகின்றனர். சில இளைஞர்கள் ராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பதால், காளைகளுடன் ஓட்ட பியற்சி, நீச்சல் பியற்சி, உள்ளிட்ட பியற்சிகளையும் எடுப்பதாக தெருவிக்கின்றனர். மொத்தத்தில் இன்று நேற்று கணினி என முடங்கும் இளைஞர், சமுத்தியத்தின் மத்தியில் வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி பகுதி இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்க வகையில் உள்ளது.   …

Related posts

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு

சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு