எதிர்ப்புக்கு பணிந்து சர்ச்சைக்குரிய இந்திய வரைப்படத்தை நீக்கிய ட்விட்டர் :இந்திய நிறுவன இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி மீது வழக்கு!!

புதுடெல்லி,: ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனி நாடாக சித்தரித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட இந்திய வரைப்படம் கடும் எதிர்ப்பு எழுந்ததால் நீக்கப்பட்டது. ட்விட்டரின் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்திய வரைப்படத்தில் ஜம்மு – காஷ்மீரையும் லடாக்கையும் காணவில்லை. ஜம்மு – காஷ்மீரை தனி நாடாகவும் லடாக்கை சீனாவில் உள்ளது போன்றும் காட்சி இருந்தது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ட்விட்டரை தடை செய் என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. ட்விட்டருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் தவறான வரைப்படத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இந்த நிலையில் இந்திய வரைப்படத்தை தவறாக காட்டியதாக ட்விட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் புலன்சாகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து ட்விட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு, தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. …

Related posts

மகாராஷ்டிரா கண்காட்சியில் முதல் பரிசுபெற்றதால் மவுசு ரூ.1 கோடிக்கு விலை பேசியும் குதிரையை தர மறுத்த விவசாயி

சுற்றுலா பயணிகள் பஸ் மீது தாவி குதித்து ஏறிய சிறுத்தை: கர்நாடகாவில் பரபரப்பு

மேற்கு வங்கத்தில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 6 பேர் பலி