எதிர்கட்சி தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்: மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் எதிர்கட்சி தலைவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டும், சிலருக்கு விலக்கப்பட்டும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (ஏக்நாத்) அணி – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவின் அணியை சேர்ந்த மூத்த தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான அஜித் பவார், திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோரின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பானது தற்போது ‘ஒய்-பிளஸ்’ பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட மூத்த தலைவர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் அனில் தேஷ்முக், சகன் புஜ்பால், பாலாசாஹேப் தோரட், நிதின் ராவத், நானா படோல், ஜெயந்த் பாட்டீல், சஞ்சய் ராவத், விஜய் வடேட்டிவார், தனஞ்சய் முண்டே, நவாப் மாலிக், நர்ஹரி ஜிர்வால், சுனில் கேதார், அஸ்லாம் ஷேக், அனில் பரப் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது….

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்