எட்டாக்கனியாக மாறும் தங்க நகைகள்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.37,568க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.37,568க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.4,696-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு குறைந்து ரூ.61.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி ஒன்றியஅரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இறக்குமதி வரி அதிகரிப்பை தொடர்ந்து தங்கம் விலையும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி சரிவை சந்தித்தது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,680க்கு விற்பனை ஆனது. இன்று காலை நிலவரப்படி வழக்கம் போல் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைவது நினைவுகூரத்தக்கது….

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கு விற்பனை..!!

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை