எடப்பாடியுடன் ஓபிஎஸ் சமரசம் ஆனது ஏன்? பரபரப்பு தகவல்கள்

திருச்சி: சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், டெல்லி பாஜ தலைமையிட உத்தரவையடுத்து எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் சமரசம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், கட்சியின் அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் இருந்து வந்ததால், கடும் அப்செட்டில் ஓ.பி.எஸ். இருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் மதுரையில் பேசிய ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தார். இது எடப்பாடி அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓபிஎஸ்க்கு செக் வைக்கும் வகையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த பாஜ தலைவரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது. சசிகலாவை கட்சியில் இணைக்க ஓபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். கட்சியில் அவர் இணைந்தால் நான் ஓரங்கட்டப்படுவேன். கூட்டணியில் இருந்தும் நீங்கள் (பாஜ) வெளியேற்றப்படலாம் என கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, பாஜ தலைவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜவின் முக்கிய நிர்வாகியை சந்தித்து, அதிமுகவில் சசிகலாவை இணைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து தெரிவித்தாராம். அந்த முக்கிய நபர், ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டை டெல்லி பாஜ தலைமைக்கு எடுத்து சென்றாராம். தமிழகத்தில் அதிமுகவில் நடந்து வரும் பிரச்னைகள் கேள்விப்பட்டு, டெல்லி பாஜ தலைமை, ஓ.பன்னீர்செல்வத்தின் மீது கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியுடன் சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும். அதிமுகவில் சசிகலாவை இணைக்க கூடாது. அதையும் மீறி இணைக்க முயற்சி செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஓபிஎஸ் எச்சரிக்கப்பட்டாராம். தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு சென்ற பாஜ தலைவர் ஒருவர், ஓபிஎஸ்சை நேரிடையாக சந்தித்து டெல்லி தலைமை தெரிவித்த விஷயங்களை கூறியுள்ளாராம். இதனால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அப்செட் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னையில் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், எனக்கும் எடப்பாடிக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.* வாய்ப்பு இல்லைஅதிமுகவில் இணைய பல்வேறு வியூகங்களை சசிகலா வகுத்து வந்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை. சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக பேசியதால், மீண்டும் அதிமுகவில் இணைந்து விடலாம் என எண்ணினார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்ததன் மூலம், அதிமுகவில் சசிகலா இணைப்புக்கு ஓபிஎஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…