எச்டிஎல் நிறுவனம் – வோக்ஹார்ட் பவுண்டேசனுடன் இணைந்து 25,000 பேருக்கு மருத்துவ உதவி திட்டம்

சென்னை: எச்டிஎல் நிறுவனம் மற்றும்  வோக்ஹார்ட் பவுண்டேசனுடன் இணைந்து  சென்னையில் வருடந்தோறும்  25,000 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.இது குறித்து எச்எப்சிஎல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்டிஎல் நிறுவனத்தின் தலைமை மேலாளர் (மார்க்கெட்டிங்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கண்ணாடி இழை வடம் (ஆப்டிக்கல் பைபர் கேபிள்) உற்பத்தியில் நாட்டிலேயே   எச்டிஎல் நிறுவனம் முன்னணியில் உள்ளது.  சென்னை கிண்டி தொழிற்பேட்டை மற்றும் ஓசூர் சிப்காட் வளாகத்தில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எச்டிஎல். நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நலிந்த மக்களின் மருத்துவ தேவைகளுக்காக  வோக்ஹார்ட் பவுண்டேசனுடன் இணைந்து ₹1.05 கோடியில் மருத்துவ உதவி திட்டத்தை தொடங்கி உள்ளது.இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 25,000 பேர் பயன் அடைவார்கள். இதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போன்ற வசதிகளுடன் நடமாடும் மருத்துவ வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டியில் நடைபெற்ற விழாவில், இந்த மருத்துவ வாகனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஓய்வு பெற்ற ஏடிஜிபி பாலசந்திரன் இந்த வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், எச்எப்சிஎல் நிறவனத்தின் நிர்வாக இயக்குனரும், எச்டிஎல் நிறுவனத்தின் தலைவருமான மகேந்திர நாகதாவும், எச்டிஎல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜி.எஸ்.நாயுடுவும், இதர நிர்வாக அதிகாரிகளும் டெல்லியில் இருந்து காணொலி மூலம் பங்கேற்றனர்.மருத்துவ வாகனம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படும்.  இந்த திட்டம் ஓசூருக்கும் பின்னர் விரிவுபடுத்தப்படும். பல்வேறு சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்காக எச்எப்சிஎல் நிறுவனம் இதுவரை ₹25 கோடி செலவிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் ₹7 முதல் ₹8 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. எச்எப்சிஎல்.லின் நிர்வாக இயக்குனரும், எச்டிஎல்லின் தலைவருமான மகேந்திர நாகதா கூறுகையில், ‘‘சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் குறிப்பாக மருத்துவம், கல்வி போன்றவற்றில்  5 லட்சம் பேர் பலனடைந்துள்ளனர். வோக்ஹார்ட் பவுண்டேசனின் ஒத்துழைப்புடன் ஏழை மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதே  எங்களின் நோக்கம்,’’ என்றார். வோக்ஹார்ட் பவுண்டேசனின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.ஸ்ரீராம் கூறுகையில், ‘‘வோக்ஹார்ட் பவுண்டேசன் எச்எப்சிஎல் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்குவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது,’’ என்றார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை