எச்இபிஎப் நிறுவனத்தில் மகளிர் விளையாட்டுப்போட்டி

 

திருவெறும்பூர், செப்.30: திருவெறும்பூர் அருகே உள்ள எச்இபிஎப் நிறுவனத்தில் மகளிர்நல அமைப்பு சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான மியூனிஸன்ஸ் இந்தியா லிமிடெட் மகளிர் நல அமைப்பு (எச் இ பி எப்) சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

திருவெறும்பூர் அருகே உள்ள எச்இபிஎப் (எச்ஏபிபி) மகளிர் நல அமைப்பின் தலைவர் பெண்கள் விளையாட்டு தினத்திற்கான வட்டமாக நின்று விளையாடுவது, மாலை செய்தல், மெதுவாக சை்ககிள் ஓட்டுதல், புத்தகங்களை தலையில் சுமந்து செல்வது, பொருட்களை சேகரித்தல், ஆடை அணிகலன் அணிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு எச் இபிஎப் மகளிர் நல அமைப்பின் தலைவர் பூனம் தியாகி தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்ததோடு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை பூனம் தியாகி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எச்இபிஎப் மகளிர் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி