ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கம் வீணாகிவிடக் கூடாது 1,635 ஊழல் வழக்குகள் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன: வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும், 1983ம் ஆண்டு முதல் 2021 வரை 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், 2018ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், இதுவரை தனக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஊழல் வழக்குகளை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவர். இது ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும். தேவையில்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகால பலன்களை பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீதி பலன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது