ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியே எனது முதன்மை நோக்கம் உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உங்களில் ஒருவனாக களத்தில் நிற்பேன்: திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு

சென்னை: ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சிதான் எனது முதன்மையான நோக்கம். உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:  வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க.. தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. இந்த வீடியோ மூலம் சில விஷயங்களை உங்க எல்லார்கிட்டேயும் பேசணும் என்று தோன்றியது. என் மனதில் படுவதை நான் ஓப்பனாக இப்போ பேசப்போறேன். இது தமிழ் மக்களுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கிற ஒரு யுத்தம்.தமிழ்நாட்டில் நோட்டாவை விட, கம்மியாக ஓட்டு வாங்குகிற ஒரு கட்சி தமிழ்நாட்டின் உரிமைகளை மொத்தமாக பறித்துக் கொண்டு இருக்கிறது. மாநில உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும். சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். தப்பு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும். திமுக இந்து மதத்துக்கு எதிரானது என்று எதிரணியினர் ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள். அதனால் நான் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் எல்லா மத மக்களும் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்தப்படுவார்கள். அவர்களின் மத நம்பிக்கைகள் மதிக்கப்படும். சமூக நீதி, சமத்துவம் பாதுகாக்கப்படும். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி தான் எனது முதன்மையான நோக்கம். எல்லா துறையும் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடை செய்யப்படும். எனது சுய நலத்துக்காக நான் யார் காலிலும் விழ மாட்டேன். எனது சுய நலத்துக்காக நான் எந்த சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், உங்களில் ஒருவனாக எப்போதும் களத்தில் வந்து நிற்பேன். இதெல்லாம் எனது மனப்பூர்வமான உறுதிமொழிகள். இந்த உறுதி மொழிகளை நான் எனது உசிரா நினைத்து கடைபிடிப்பேன். இதை நான் மீறினால் நீங்க என்னை நேரடியாக கேள்வி கேட்கலாம். சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று திமுக கூட்டணிக்கு வாக்களித்த நீங்கள் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுகவுக்கும், நமது கூட்டணி கட்சிகளுக்கும் உங்கள் வாக்குகளை வழங்க வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்….

Related posts

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை தொலைதூர தேர்வு மையங்களுக்கு அனுப்புவதன் உள்நோக்கம் என்ன? வைகோ கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்