ஊராட்சி தலைவர் அவதூறாக பேசுவதாகக் கூறி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்

தென்காசி: தென்காசி அருகே முத்துமாலைபுரத்தை சேர்ந்த முப்பிடாதி மனைவி மகேஸ்வரி (35). சில்லரைபுரவு ஊராட்சி மன்றத்தில் 2வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த தென்காசி போலீசார் ஓடி வந்து தடுத்து நிறுத்தியதோடு உடலில் தண்ணீர் ஊற்றி மீட்டனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். விசாரணையில், ‘தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு வழங்க மகேஸ்வரி வந்திருந்தார். மனுவில், ‘4 பெண்களுக்கு சீட்டுப்பணம் பெற்று கொடுத்தேன். அவர்கள் பணத்தை தராமல் என்னை ஊராட்சி தலைவரிடம் பொய்யாக புகார் கொடுத்ததால் அவர் என்னை அவதூறாக பேசுகிறார்’ என குறிப்பிட்டிருந்தார். …

Related posts

ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது

சேலம் சரகத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்: ஒன்று முதல் 10 அடியில் விற்பனைக்கு தயார்

மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கையுடன் பேசி நிரந்தர தீர்வுகான வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை