ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி கூட்டம் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வரதராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். விரிவுரையாளர் பாலு கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்கவும், திட்டங்கள் ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள், நிதி ஒதுக்கீடுகள், கிராம ஊராட்சி சொத்துக்கள் உருவாக்கம் மற்றும் பராமரித்தல் பணிகள், ஊராட்சியில் வரவு மற்றும் செலவீனங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் இயங்கலை மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யவது குறித்தும், மேலும் கிராம ஊராட்சியில் அனைத்து வரவீனங்கள் மற்றும் செலவீனங்களையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தும் அனைவரும் பார்வையிடும் வகையில் இந்த தொழில்நுட்பம் உறுவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்