ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மிளிரும் பள்ளி திட்டத்தில் தூய்மை பணி

ஈரோடு, ஜூன் 6: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1 கோடியே 8 லட்சத்துக்கு நேற்று கொப்பரை விற்பனை நடைபெற்றது. பெருந்துறை வேளாண் மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 2,595 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்பரைகள் 1,294 மூட்டைகள் வரப்பெற்றிருந்தன.

இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 76.36க்கும், அதிகபட்சமாக ரூ. 97.72க்கும் விற்பனையாகின. 2ம் தரக் கொப்பரைகள் 1,301 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.07.99க்கும், அதிகபட்சமாக ரூ. 89.90க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 8 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை