சென்னை: சென்னை போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட வாகன சோதனை மற்றும் ரோந்து பணியின்போது கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 278 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 ஆட்டோக்கள் என மொத்தம் 285 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 695 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது….