ஊரடங்கு விதி மீறல்: முகக்கவசம் அணியாத 769 பேர் மீது வழக்கு..! போலீசார் நடவடிக்கை

சென்னை: கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 251 வாகனங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 769 பேர் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணித்து. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில் ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 233 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 4 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 251 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 769 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு