ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் வேலை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வலங்கைமான், ஆக. 14: வலங்கைமான் மற்றும் குடவாசலில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் பயனாளி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடவாசல் பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலையை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. குடவாசல் வடக்கு-தெற்கு மற்றும் குடவாசல் நகர விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் ஆனந்தன், சுப்பிரமணியன், சோமு தலைமை வகித்தனர். அமைப்பின் செயலாளர்கள் லெனின்,சந்திரகாசன், லெனின் கோரிக்கையை வலியுறுத்தினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி கோரிக்கை விளக்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரிடம் மனு அளித்தனர். குடவாசல் பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை வழங்கியும், தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஏற்றதாழ்வு இல்லாமல் சட்ட கூலி ரூ. 319 வழங்கிட வேண்டும்,100 நாள் வேலை செய்யும் இடத்தில் குடிநீர், முதல் உதவி பெட்டி, குழந்தைகள் பாதுகாப்பு வசதி செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர் ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையினை வலியுறுத்தி வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்பு சாமி மாவட்டத் துணைச் செயலாளர் சுப்பிரமணியன் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலையா, டிஒய்எப் ஐ ஒன்றியச்செயலாளர் விஜய், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சந்திரோதயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்