ஊத்துக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கிராமத்தில் தனியார் கம்பெனி உள்ளது. இதில், மயிலாப்பூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(38) என்பவர் கம்பெனியின் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை நெல்வாய் கிராமத்தை சேர்ந்த செங்கல்வராயன்(45) மற்றும் ஊத்துக்கோட்டை கொய்யா தோப்பை சேர்ந்த இளவரசன்(20) ஆகியோரை கம்பெனிக்கு ஏற்றிச்சென்றார். மேலும், வழியில் பஸ்சுக்காக காத்திருந்த வெங்கடாபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி(55), மயிலாப்பூரை சேர்ந்த பாபு(47), கூனிப்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி(37), கச்சூரை சேர்ந்த விஜயா(45) ஆகிய 4 பேர் என மொத்தம் 6 பேரை வேனில் ஏற்றிக்கொண்டு ஒதப்பை நோக்கி சென்றார்.அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், 6 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. டிரைவர் காயமின்றி தப்பினார். தகவலறிந்த பென்னலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 6 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், பலத்த காயமடைந்த செங்கல்வராயன், ராஜேஸ்வரி ஆகியோரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. …

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்