ஊத்துக்கோட்டையில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளராக டிஜெ.கோவிந்தராஜன் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் நேற்று எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தார். இதைத்தொடர்ந்து, ஊத்துக்கோட்டை ரெட்டி தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெண்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களிலும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தார். அப்போது எல்லாபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, சத்தியவேலு, ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அப்துல் ரசீத், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். …

Related posts

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

பாஜகவுக்கு பாடம் புகட்ட ‘இந்தியா’ கூட்டணி புது வியூகம்; துணை சபாநாயகர் வேட்பாளர் அவதேஷ் பிரசாத்?: கூட்டத் தொடர் முடிய 3 நாட்களே உள்ளதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை