ஊத்தங்கரையில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு போலீஸ் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காய்கறி வியாபாரிகள், கூலி தொழிலாளிகள், செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளிகளிடம், அவர்களுக்கே தெரியாமல் கள்ள நோட்டுகள் புழங்கி வருகிறது. நேற்று ஊத்தங்கரை-திருவண்ணாமலை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்க ஒருவர் பணம் கொடுத்துள்ளார். அதில் 100 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருந்ததை பார்த்த டாஸ்மாக் விற்பனையாளர், நோட்டின் மீது கள்ள நோட்டு என பேனாவில் எழுதி, அவரிடமே ஒப்படைத்தார். கள்ள நோட்டு பற்றி அறியாத அந்த நபர், செங்கல் சூளையில் கூலிவேலை செய்து வருவதாகவும், கள்ளநோட்டு என தெரியாமல் கொண்டு வந்துவிட்டதாக கூறி திரும்பி சென்றார். ஊத்தங்கரை பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால், கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை