ஊதிய உயர்வு வழங்க கோரி ஓசூரில் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூர்: ஓசூரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் சிப்காட்டில் அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் 2வது பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்து 15 மாதங்கள் ஆகியும் சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எண்ணூர் லேலண்ட் தொழிலாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். உடனடியாக ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் அசோக் லேலண்ட் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை