ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்: அரசுக்கு மாவட்ட நீதிபதிகள் கோரிக்கை

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைப்போல் தமிழக அரசும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை விரைந்து என்று மாவட்ட நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கான அகில இந்திய ஊதிய குழு மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஊதியம் உள்ளிட்ட பண பலன்களை 2021ம் ஆண்டு முதல் அளிப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை செய்தன. இந்த பரிந்துரைகளில் சில மாநில அரசுகள் அமல்படுத்த முடியாது என்று கருத்து தெரிவித்தன.  இதையடுத்து அகில இந்தில் நீதிபதிகள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஊதிய உயர்வை 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வழங்க வேண்டும். 2016ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய இந்த ஊதிய உயர்வு நிலுவை தொகையை மாநில அரசுகளால் மொத்தமாக வழங்க முடியாது. அதனால், 3 தவணையாக இந்த தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி பல மாநில அரசுகள், உரிய அரசாணை பிறப்பித்து 25 சதவீத ஊதிய நிலுவை தொகையை கடந்த அக்டோபர் மாதம் வழங்கி விட்டது. புதுச்சேரி மாநிலம் அரசும் கடந்த அக்டோபர் மாதம் நீதிபதிகளுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்கி விட்டது. தமிழக அரசு இதுவரை இந்த தொகையை வழங்கவில்லை. இதுகுறித்து அரசாணையும் பிறப்பிக்கவில்லை. இதுகுறித்து, நீதிபதிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு தமிழக நிதித்துறையிடம் கொடுத்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு நீதிபதிகளுக்கான ஊதிய உயர்வு நிலுவை தொகையை தர நடவடிக்கை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்