ஊட்டி மைய நூலகத்தில் நடந்த கோடை கால பயிற்சி நிறைவு

 

ஊட்டி,ஜூன்4: ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. ஊட்டி மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.ஊட்டியில் மாவட்ட மைய நூலகம் உள்ளது.மைய நூலகத்தில் 18,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர அங்கு போட்டி தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் இலவச பயிற்சி பெறவும்,பழங்குடியின மக்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த சிறப்பு நூலகம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.மாவட்ட மைய நூலகத்தில் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.இதில் கணினி வகுப்பு, ஓவிய வகுப்பு, பரதநாட்டியம் மற்றும் யோகா வகுப்புகள் நடைபெற்றது.இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றனர்.முடிவில் பயிற்சிகள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை