ஊட்டி நகரை இணைக்கும் மாற்றுப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

ஊட்டி: ஊட்டி நகரை இணைக்கும் மாற்றுப்பாதை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் ேதாறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக, ேகாடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது போன்ற சமயங்களில் வாகனங்கள் அதிகளவு ஊட்டிக்கு வரும் நிலையில், போக்குவரத்தை சீரமைக்க பல்வேறு சாலைகளும் மாற்றுப்பாதைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் மற்றும் கோவை போன்ற வெளியூர்களில் இருந்து குன்னூர் வழித்தடத்தில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் கோடை காலங்களில் ஊட்டி நகரை இணைக்கும் மாற்றுப்பாதையாக காந்திநகர், மஞ்சனக்கொரை சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சாலையில், தற்போது பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதில், இச்சாலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் சீசன் துவங்கும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது. இச்சமயங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த மாற்றுப்பாதையை காவல்துறையினர் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு முன்னதாக, காந்திநகர் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு