ஊட்டி திட்டப் பணியில் பணியாற்றும் பிற மாவட்ட பணியாளர்களுக்கு மலைப்படி வழங்க வேண்டும்

ஊட்டி, ஏப். 30: ஊட்டி திட்டப் பணியில் பணியாற்றும் பிற மாவட்ட பணியாளர்களுக்கு மலைப்படி, அளவைப்படி ஆகியவைகளை வழங்க வேண்டும். தமிழ்நாடு நில அளவை அலுலவலர்கள் ஒன்றிப்பு நீலகிரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இமானுவேல் தாமஸ் வரவேற்றார். மாநில செயலாளர் சதீஷ்குமார் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பைரன், முன்னாள் மாவட்ட தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் உதயகுமார் பேசினார்.கூட்டத்தில், நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பணி புரியும் நில அளவை பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். நில அளவை துறையில் காலியாக உள்ள கூடுதல் இயக்குநர் பதவி முதல் குறுவட்ட அளவர் பதவி வரை உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பதவி உயர்வும் வழங்கிட வேண்டும். வெளி முகமை மூலம் புல உதவியாளர்கள் நியமனம் செய்து அரசாணையை ரத்து செய்து கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஊட்டி திட்டப் பணியில் பணியாற்றும் பிற மாவட்ட பணியாளர்களுக்கு மலைப்படி, அளவைப்படி ஆகியவைகளை வழங்க வேண்டும். பதவி உயர்விற்கு தகுதியாக உள்ள திட்டப் பணியாளர்களை தாய் மாவட்டத்திற்கு திருப் அனுப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். சரண்டர், அகவிலைப்படி ஆகியவைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கோட்டத் தலைவர் அலோசியஸ் அருண்குமார் நன்றி கூறினார். இதில், ஏராளமான நில அளவை ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

Related posts

முசிறி டிஎஸ்பி பொறுப்பேற்பு

சமயபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் 2 ஆடுகள் திருட்டு

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்