ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துகுலுங்கும்: பல வண்ணங்களை கொண்ட டியூபுரஸ் பிகோனியா மலர்கள்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல வண்ணங்களை கொண்ட டியூபுரஸ் பிகோனியா மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை கவர்கிறது. அடுத்த மாதம் 20ம் தேதி மலர் கண்காட்சி நடக்கும் நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன. அதேபோல் தொட்டிகளிலும் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன. ஓரிரு நாட்களில் அனைத்து தொட்டிகளிலும் மலர்கள் பூத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா நர்சரிகளிலும் பல ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பெரும்பாலான தொட்டிகளில் பல வகையான வண்ண மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன. தற்போது தொட்டிகளில் பல வண்ணங்களை கொண்ட டியூபுரஸ் பிகோனியா மலர்கள் பூத்துள்ளன. இதை, சுற்றுலலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த மலர் தொட்டிகள் ஓரிரு நாட்களில் பூங்கா மாடங்களிலும் கண்ணாடி மாளிகையிலும் அலங்கரித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Related posts

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !

சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் – அமைச்சர்கள் ஆலோசனை