ஊட்டியில் நேற்று மேக மூட்டம்

 

ஊட்டி, மே 8: சமவெளி பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அக்னி வெயில் துவங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் கோடை வெயிலை சமாளிக்கவும், அதே சமயம் விடுமுறையை குளிர்ச்சியாக கொண்டாடவும் ஊட்டியை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர். நேற்று காலை முதலே ஊட்டியில் மேக மூட்டம் காணப்பட்டது.

இதனால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். மாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயாக ‘வாக்கிங்’ செல்கின்றனர். இங்கு நிலவும் குளிரான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

 

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்