ஊட்டியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிகள் குறித்து உள் தணிக்கை குழுவினர் ஆய்வு

 

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான உள் தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடக்கும் சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது. இதன்படி ஊட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில் கோவை உதவி கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) உமா சுந்தரி மற்றும் உதவி பொறியாளர்கள் விக்னேஷ்ராம்,ஸ்ரீபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது சாலையின் தரம்,உறுதி தன்மை,அளவுகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டன. ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் குழந்தைராஜூ,ஊட்டி உதவி கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் ஸ்டாலின், தரக்கட்டுபாட்டு உதவி பொறியாளர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி