ஊட்டியில் தொடர் மழை தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்ட மலர்கள் அழுகின

ஊட்டி: தொடர் மழை காரணமாக தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களில் மலர்கள் அழுகி உதிர துவங்கியுள்ளன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி கடந்த 20ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடந்தது. இதற்காக பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் காணப்பட்டது. மேலும் இந்த மலர் கண்காட்சியின் போது ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 124வது மலர் கண்காட்சி, வேளாண் பல்கலைக்கழகம், ஊட்டி 200, மீண்டும் மஞ்சப்பை, பழங்குடியினர் உருவங்கள் உட்பட பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள டேலியா உட்பட சில மலர்கள் அழுகியுள்ளன. அதேபோல், மாடங்களில் வைக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் மலர் தொட்டிகளிலும் இருந்த மலர்களும் அழுகி உதிர துவங்கியுள்ளன. இதனை பூங்கா நிர்வாகம் மாற்றாமல் உள்ளதால், மலர் அலங்காரங்கள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு