ஊட்டியில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு

 

ஊட்டி, டிச.20: தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவிராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் வரவேற்றார். ஈபிஎப்-95 மாவட்ட தலைவர் ராஜேந்திரன் துவக்கவுரையாற்றினார். வட்ட தலைவர் ஆஸரா, வட்ட செயலாளர் தமிழ்மணி, சந்திரபாய், மாவட்ட இணை செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

சிஐடியு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு பென்சன் பாதுகாப்பு குறித்தும், தேர்தல் காலங்களில் ஓய்வூதியர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு நமது ஓட்டு உரிமையை செலுத்த வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஓய்வூதியதாரர்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள் குறித்தும், அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப்ராஜ், மின்வாரிய அமைப்பு மாநில துணை தலைவர் மைக்கேல், ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் அரங்கநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கருத்தரங்கில் 60 பெண்கள் உட்பட 130 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்