உ.பி 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 260 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்: அதிகம் ரூ296 கோடி, குறைவு ரூ6,700

நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 58 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 2ம் கட்டமாக மேற்கு பகுதியின் 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் 586 வேட்பாளர்களில் 584 பேரின் உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்து கோடீஸ்வர வேட்பாளர் பட்டியலை உத்தரப் பிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. இதில், 260 பேர் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.  அதில், ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நவாப் காசிம் அலி கான் ரூ296 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். பரேலி கான்ட் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர் சுப்ரியா அரோன் ரூ157 கோடி சொத்துக்களுடன் 2ம் இடத்திலும், நவ்காவான் தொகுதியில் போட்டியிடும் பாஜ.வின் தேவேந்திர நாக்பால் ரூ140 கோடி சொத்துக்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். அதேநேரம், ஷாஜஹான்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சஞ்சய் குமார், வெறும் ரூ6,700 மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை மட்டுமே வைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் விஷால் குமார் (நெஹ்தார் தொகுதி) மற்றும் உஸ்மல் மாலிக் (சஹரன்பூர் நகர்) முறையே ரூ13,500, ரூ15,000 மதிப்புள்ள சொத்துகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

பிரதமர் மோடி எழுதிய ‘கர்பா’ பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்..!

கொல்கத்தா RG கார் மருத்துவமனை மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!!