உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்

சென்னை:  பழங்குடி இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கடந்த 2016  அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலில் நடைபெற இருந்த நிலையில், அதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தேர்தலுக்கான அறிவிப்பாணை முறையாக வெளியிடப்படவில்லை என்று கூறி அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். அதன்படி 2017 செப்டம்பர் 18க்குள் அறிவிப்பாணை வெளியிட நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி , இதர பகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது என்பதால் நீதிமன்ற அவமதிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றார்.   தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் சிவ சண்முகம் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலை முழுமையாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்