உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கலுக்கு இன்று கடைசிநாள்-25ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு அக்.9ல் தேர்தல் நடக்க உள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அக்.9ல் தேர்தல் நடக்க உள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நதளாகும். இன்று மாலை 5 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை செப்.25 பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம். அக்.9ல் வாக்குப்பதிவும், அக்.12ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. காளையார்கோவில் ஒன்றியத்தில் வார்டு எண்.6க்கான ஒன்றிய கவுன்சிலர் பதவி, கண்ணங்குடி ஒன்றியத்தில் வார்டு எண்.3க்கான ஒன்றிய கவுன்சிலர் பதவி, சிவகங்கை ஒன்றியத்தில் மேலப்பூங்குடி, ஒக்குபட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவி மற்றும் 11 ஒன்றியங்களில் உள்ள 34 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 15ம் தேதியில் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. மொத்தமுள்ள 38 பதவிகளுக்கு இதுவரை 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் மட்டும் கட்சி சின்னம் அடிப்படையில் நடக்கிறது. மற்ற பதவிகளுக்கு சுயேட்சை சின்னம் அடிப்படையில் தேர்தல் நடக்கும். காளையார்கோவில் ஒன்றியம் வார்டு எண் 6ல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமி, காளையார்கோவில் யூனியன் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, ஆரோக்கியசாமி, கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேதுபதிராஜா மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.தேர்தல் புகார் அளிக்க தொலைபேசி எண்சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 38 பதவி காலியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பிரிவில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலை பேசி எண் 1800 425 1627 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு