உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் திமுக!: நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!!

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  ஆலோசனை நடத்த நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்று துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை