உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்து மோடி கவுன்சிலராக போகிறாரா? கோவையில் கமல்ஹாசன் கேள்வி

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் கமல்ஹாசன் அளித்த பேட்டி: ஒரு வருடத்திற்கு பிறகு கோவைக்கு பிரசாரத்திற்கு வந்துள்ளேன். நாங்கள் கடமை செய்ய வந்துள்ளோம். எங்களை அச்சுறுத்துவதும், விலகிக்கொள்ள கூறுவதும் பாராட்டு கூட்டங்களாகவே கருதுகிறேன். கமல் ஜெயித்தால் மோடி வந்துவிடுவார் என பிரசாரம் செய்கின்றனர். மோடி தோற்றாலும், ஜெயித்தாலும் எனக்கு கவலையில்லை. தமிழகம் ஜெயிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எங்களை பாஜவின் பி டீம் என சொல்லி பார்த்தார்கள். இப்போது கமல் வந்தால் மோடி வந்துவிடுவார் என சொல்லி பிற கட்சிகள் பிரசாரம் செய்கிறது. மோடி ஜெயித்து கவுன்சிலராக போகிறாரா என்ன?. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக எதிர்கொள்வேன். வீடு வீடாக சென்று காசு கொடுக்க மாட்டோம். கிராமசபை நடத்தப்படுவதைபோல் ஏரியா சபை, வார்டு கமிட்டி நடப்பது உறுதி செய்யப்படும் என்பது எங்கள் கட்சியின் வாக்குறுதி. எங்கள் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு யாரும் தாவவில்லை. கொத்திக் கொண்டு போகின்றனர். நான் தலைவராகவே இருக்க விரும்புகிறேன். மேயராக விரும்பவில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.* பிரமாண பத்திரம் கோவை தனியார் ஓட்டலில் கமல்ஹாசன் கட்சியின் வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களின் முன்பு வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தை வெளியிட்டு பேசுகையில், ‘‘தரமான குடிநீர், மழைநீர் வடிகால், தரமான சாலை, எரியும் தெருவிளக்கு உறுதி  செய்வேன், லஞ்சம்  ஒழிக்கப்படும் என எங்களின் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். வேட்பாளர் ரம்யா, நான் ஜெயித்து வந்து கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றவில்லை என்றால் என் பதவியை  ராஜினாமா செய்வேன் என எழுதி வீடு வீடாக கொடுத்துள்ளார்” என்றார்….

Related posts

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்

சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிகிறது, எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி : அண்ணாமலை

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் கோரிக்கை