உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பழநி, ஜூலை 13: பழநி தாலுகா அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், தூய்மை பணியை தனியார்மயமாக்கக் கூடாது. தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது. குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பேரூராட்சியில் பணிபுரியும் சுயஉதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ேகாஷங்கள் எழுப்பினர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்