உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கும் வகையில் அனைத்து நீர்நிலைகளிலும் மீன்கள் வளர்க்கப்படும்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

மேட்டூர் : உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் மீன்கள் வளர்க்கப்படும் என மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மேட்டூர் வந்தார். அங்குள்ள மீன்வளத்துறை மீன் விதைப்பண்ணை, மீன்வளத்துறை அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணை மீன் விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மீன் குஞ்சுகளை மேட்டூர் நீர்த்தேக்கத்தில் விட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் நீர்த்தேக்கத்தில் ஆண்டுதோறும் 45 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. இதனை 1 கோடி மீன் குஞ்சுகளாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதேபோன்று மீன் குஞ்சுகளை வளர்த்து, மக்களுக்கு சத்தான மீன்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மீன்பிடி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள தகுதியான நபர்களுக்கு லைசென்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உள்நாட்டு மீன் வளத்தை பெருக்க மழை காலங்களில் கிராமப்புறங்களில் உள்ள ஏரி -குளங்கள் போன்ற நீர்நிலைகளில் அதிகளவில் மீன் குஞ்சுகள் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.தொடர்ந்து மேச்சேரியில் உள்ள ஆடு ஆராய்ச்சி பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி, துணை செயலாளர் சம்பத்குமார், நகர செயலாளர் காசிவிஸ்வநாதன், நகரமன்ற தலைவர் சந்திரா, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன், கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, மேட்டூர் 7வது வார்டு பிரதிநிதி கனகமணி, 8வது வார்டு செயலாளர் அன்பழகன், நகர இளைஞரணி சோபன்ராஜ், மேட்டூர் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை