உளுந்தூர்பேட்டையில் வங்கி பெண் அதிகாரி கொலை எஸ்ஐ உள்பட பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததால் மனைவியை கொன்றேன்

உளுந்தூர்பேட்டை, ஆக. 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி(32) என்ற பெண் வங்கி அதிகாரி பூட்டிய வீட்டிற்குள் இருந்த தனி அறையில் முகம் மற்றும் தலை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது செல்போன் அணைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ரமணியை பார்க்கச் சென்ற அவரது தாய் லட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்து இப்போது ரமணி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு எடைக்கல் போலீசார் சென்று கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ரமணியின் உடலை கைப்பற்றி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த நிலையில் ரமணியின் கணவர் அசோக்(33) செல்போன் அனைக்கப்பட்டு இருந்ததால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் தலைமறைவான அசோக்கின் தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வேப்பூரில் பதுங்கி இருந்த அசோக் எடைக்கல் போலீசாரிடம் சரணடைந்தார் இதைத் தொடர்ந்து அசோக்கிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல கிடுகிடும் தகவல்கள் வெளியானது.

ரமணி தன்னை திருமணம் செய்வதற்கு முன்பாக இருவரை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தன்னிடம் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு உதவி காவல் ஆய்வாளர், காவலர் ஆகியோருடனும், மேலும் பல ஆண்களுடன் தவறான பழக்கம் வைத்திருந்ததாகவும், அதை தெரிந்து தான் அறிவுரை கூறி திருந்துமாறு கூறியபோது தன்னை அடியாள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் வேறு வழியின்றி ரமணியை தீர்த்துக் கட்டியதாக அசோக் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து வங்கி பெண் அதிகாரியான தனது மனைவி ரமணியை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி