உளுந்தூர்பேட்டையில் சிக்னல் கோளாறு 2 ரயில்கள் அரைமணி நேரம் தாமதம்

 

உளுந்தூர்பேட்டை, ஜூன் 11: சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5.15 மணி அளவில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது உளுந்தூர்பேட்டை அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் விழுப்புரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற பயணிகள் ரயிலும் 5.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் வந்தது.

அந்த ரயிலும் மற்றொரு பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக 5.45 மணி அளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும், 5.55 மணி அளவில் பயணிகள் ரயிலும் அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு ரயில்களும் அரை மணி நேரம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று இருந்ததால், ரயிலில் சென்ற பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்