உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்

 

பழநி, ஜூன் 25: உளுந்து பயிரில் 25% வரை கூடுதல் மகசூல் பெற 2% டிஏபி கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமான தொழில்நுட்பமாகும். 1 ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டிஏபி உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊறவைத்து நன்கு கலக்கிவிட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டு எடுத்துக் கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை நேரங்களில் கைத்தெளிப்பான் கொண்டு 1 ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.

35வது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது டிஏபி கரைசல் தெளிப்பது சிறந்ததாகும். இதனால் 1 ஏக்கரில் 25% முதல் 30% வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே, உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிஏபி கரைசல் தெளித்து பயன்பெற வேண்டுமென வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு