உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படை மூலம் கணவனை தீர்த்து கட்டிய மனைவி: கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது

சித்தூர்: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை தனது கள்ளக்காதலன் ஆதரவுடன் கூலிப்படையை வைத்து மனைவி கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் முருக்கம்பட்டு அடுத்த கோடிகுட்ட கிராமம் அருகே வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கடந்த 5ம்தேதி சித்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். சடலமாக கிடந்தவர் கிரீம்ஸ்பேட்டை அடுத்த பாலாஜி காலனி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வடிவேலு (27) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி செல்வராணியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் செல்வராணியும், அவரது கள்ளக்காதலன் வினய் என்பவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. நேற்று வினய்யை பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஆட்டோ டிரைவரான வடிவேலுக்கும், செல்வராணிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் செல்வராணிக்கும் எம்பிஏ பட்டதாரியான வினய்க்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது வடிவேலுக்கு தெரியவந்தது. மனைவியை கண்டித்துள்ளார். செல்வராணி கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில் இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்த வடிவேலு கடுமையாக எச்சரித்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு பிறகு செல்வராணி, கள்ளக்காதலனிடம் ‘எனது கணவனின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது. நீயும், நானும் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் எனது கணவனை கொன்றுவிடு’ என கூறியுள்ளார். இதையடுத்து வினய், தனது நண்பரான சந்தைப்பேட்டை சுன்னப்ப வீதியை சேர்ந்த நிரஞ்சன் (30), அவரது நண்பரான வள்ளியப்ப நகரை சேர்ந்த கிஷோர் (29) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் கொலை செய்ய ₹2.50 லட்சம் தருவதாக வினய் தெரிவித்துள்ளார்.இதையடுத்து கிஷோர், நிரஞ்சன், வினய் ஆகிய 3 பேரும் கிஷோர் மொபைலில் இருந்து வடிவேலுக்கு போன் செய்து, ‘நான் உனது நண்பன்’ என்று பேசியுள்ளனர். அதற்கு வடிவேலு, ‘நீ யார்’ என்றே தெரியவில்லை என்று கூற, ‘உனது பழைய நண்பர்.. என்னை நேரில் பார்த்தால் அடையாளம் தெரியும். 2 வருடங்களாக வெளிமாநிலத்தில் வேலை பார்த்தேன். தற்போதுதான் உனது மொபைல் நம்பர் எனக்கு தெரியவந்தது. உன்னை  நேரில் சந்திக்க வேண்டும்’ என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி 3 பேரும் வரவழைத்தனர். ஆட்டோவில் சென்றபோது, தயாராக இருந்த நிரஞ்சன், கிஷோர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக வடிவேலை மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் வினய்க்கு போன் செய்தனர். அவரும் வந்தார். இதையடுத்து, நிரஞ்சன், கிஷோர் ஆகியோர் வடிவேலுவின் கால், கைகளை பிடித்துக்கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி செல்வராணி-வினய் மற்றும் கிஷோர், நிரஞ்சன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்….

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்