உலக யோகா தின விழா கூட்டுமங்கலம் விவேகானந்தா பள்ளி

குளச்சல், ஜூன் 23: மண்டைக்காடை அடுத்த கூட்டுமங்கலம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9 வது சர்வதேச யோகா தினம் நடந்தது. பள்ளி நிறுவனர் மணிகண்டன் தலைமை வகித்தார். தாளாளர் ரெஜீஷ் கிருஷ்ணன், பள்ளி முதல்வர் தங்கசுவாமி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பத்ம ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணைத் தலைவர் சுஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி
நாகர்கோவில் : நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் கல்லூரி மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர். பயிற்சியை பேராசிரியர் கேப்டன் பாயிட் வெஸ்லி ஒருங்கிணைத்தார். இதில் கல்லூரி தாளாளர் டாக்டர் வினோத்குமார், முதல்வர்(பொறுப்பு)் ஷீலா கிறிஸ்டி மற்றும் துணை முதல்வர், பேராசிரியர்கள் கலந்து ெகாண்டனர்.

சிவந்தி ஆதித்தனார் கல்லூரி
தென்தாமரைகுளம் : சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நடந்த சர்வதேச யோகாதின விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர் அழகேசன் வரவேற்றார். தென்குமரி கல்விக்கழக தலைவரும், சிவந்தி ஆதித்தனார் கல்லூரியின் தலைவருமான காமராஜ் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ராஜன் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு யோகா சம்பந்தமாக சிறப்புரையாற்றி யோகா பயிற்சியினை தேவி இளையபெருமாள், தேன்மொழி, பிரேமாதர்மராஜ். ராஜதனபால், ஆகியோர் வழங்கினர்.

ஹிந்து வித்யாலயா பள்ளி
நாகர்கோவில் : கிருஷ்ணன் கோவில் எஸ்.என்.எம். ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் இந்திரா தேவி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பத்மா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பொறுப்பு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் நாராயணன் கலந்து கொண்டு மாணவர்கள் யோகா பயிற்சி செய்வதனால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கினார். ஆசிரியை நிர்மலா யோகத்தின் நிலைகளை பற்றி எடுத்துரைத்தார். மாணவர்கள் சூரிய நமஸ்காரம் மற்றும் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். இந்து வித்யாலயா பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் சின்ன தங்கம் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்