உலக மரபு வார விழா புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்

மாமல்லபுரம்: உலக மரபு வார விழாவையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க இன்று இலவச மாக சுற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும் உள்ள புராதன சின்னங்களை போற்றவும், பாதுகாக்கவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டு தோறும் நவம்பர் 19 முதல் 25ம் தேதி வரை, உலகமரபு வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்று ஒரு நாள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க, சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இதைதொடர்ந்து,  இன்று மட்டும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் அலுவலர் சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்