உலக புகழ்பெற்ற சிற்பி சுதார் வீட்டில் கொள்ளை: ஒற்றுமை சிலை, 27 லட்சம் பணம், நகை திருட்டு

நொய்டா: உலகளவில் புகழ்பெற்ற சிற்பி ராம் சுதாரின் வீட்டில் இருந்த ஒற்றுமை சிலை மட்டுமின்றி பணம், நகைகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சுதாரின் வீட்டு பணியாளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். உலக புகழ்பெற்ற சிற்பி ராம் சுதார். செக்டார்  20 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட செக்டார் 19 பகுதியில் சுதார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இவர் வடிவமைத்த ஒற்றுமை சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகளை பாதுகாத்து வைத்திருந்தார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாக பணியாளர் ஒவருரை நியமித்தார் சுதார். இவரது வீட்டில் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்த வீட்டுப்பணியாளர் நீண்ட விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் தற்காலிகமாக வேறு ஒரு பணியாளரை ஒரு வாரத்திற்கு முன்பு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் சுதார் பணியமர்த்தினார். கடந்த செவ்வாயன்று சுதார் குடும்பத்தினர் சில வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வீடு திரும்பினர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீடு முழுவதும் ஆய்வு செய்தபோது, வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. பீரோவில் இருந்த ₹27 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் ஆகியவையும் மாயமானதோடு, வீட்டு பணியாளரும் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து சுதார் குடும்பத்தினர் போலீசார் புகார் தெரிவித்ததையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான வீட்டு பணியாளரையும் தேடி ஒடிசாவுக்கு போலீஸ் குழுவினர் சென்று தேடி வருவதாக நொய்டா கூடுதல் துணை கமிஷனர் ரன்விஜய் சிங் தெரிவித்தார்….

Related posts

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு

சாலிகிராமத்தில் டேட்டிங் அப் மூலம் பாலியல் தொழில் நடத்திய அசாம் வாலிபர் கைது