உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!: கொரோனா பரவலால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2ம் ஆண்டாக சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற நிகழ்விற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏப்ரல் 26ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 24ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் கோவில்கள் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவானது சுருக்கமாக நடைபெற்றது. இந்த ஆண்டு திருக்கல்யாண நிகழ்வு என்பது தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கொடியேற்றத்தை பொறுத்தவரையில் சுவாமி சன்னதி முன்பாக இருக்கக்கூடிய தங்க கொடிமரத்தில் ஆரம்பகட்ட பூஜைகள், பணிகள் நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் அந்த இடத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறார். திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் யானை, காமதேனு, யாழி, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் காலை, இரவு நேரங்களில் வலம் வருவர். கோவிலின் உள்ளே சிவாசாரியர் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமர்சியாக நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமின்றி இதன் தொடர்ச்சியாக வரவுள்ள அழகர் ஆற்றில் இறங்கக்கூடிய நிகழ்வும் முக்கியமானதாகும். இந்த இரு நிகழ்ச்சிகளும் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக முழுமையான கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கோவிலின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கோவிலின் முன்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவி வந்தாலும் கூட சித்திரை திருவிழாவின் கொடியேற்ற விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. …

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’