உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் சானு

புதுடெல்லி: கொலம்பியாவின் போகோடா நகரில் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரின் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 113 கிலோ,  ஸ்னாட்ச் முறையில் 87 கிலோ உள்பட மொத்தம் 200 கிலோ தூக்கி 2வது இடம் பிடித்தார். சீன வீராங்கனைகள் ஜியாங் ஹூயிஹூவா மொத்தம் 206 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தையும், ஹோ ஜியீ (198 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். மீராபாய் (28 வயது, மணிப்பூர்) ஏற்கனவே 2017ம் ஆண்டு உலக பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து 2020ல் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் வெண்கலம், காமன்வெல்த் போட்டிகளில் 2018, 2022ல் தலா ஒரு தங்கம், 2014ல் வெள்ளி வென்றுள்ளார்….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி