உலக பணக்காரர்களில் முதலிடம் மணிக்கு 127 கோடி சம்பாதிக்கும் மஸ்க்

புதுடெல்லி: உலகில் உள்ள மிகப்பெரிய பணக்கார்கள் பட்டியலை ப்ளும்பெர்க்  என்ற பொருளாதார தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இதில், உலகில் உள்ள மிகப்பெரிய பணக்கார்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில், அவரை 2வது இடத்துக்கு தள்ளிவிட்டு, டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ  எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, அதன் பங்குகள் விலை தொடர்ந்து உயர்ந்ததால், மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.14 லட்சத்து 23 ஆயிரம் 500 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலராகும். கடந்த ஒரு ஆண்டில் எலான் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ன. இதன் பின்னணியில், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 17.36 மில்லியன் டாலர், அதாவது ரூ.127 கோடியை எலான் மஸ்க் சேர்த்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் பணக்கார்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்….

Related posts

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்