உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினவிழா

 

கும்பகோணம், செப். 20:கும்பகோணம் தாலுக்கா கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும், சாக்கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் இணைந்து நடத்திய உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினவிழா வில்லுபாட்டு மற்றும் நாடக வடிவில் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரி உதவி பேராசிரியை சூர்யா வரவேற்றார்.

தலைமை விருந்தினராக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இராஜேஸ்வரன், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஜென்ரல் சர்ஜன் டாக்டர் அருள்வதனி மற்றும் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் (கிரேடு 1) சுதா, செவிலிய பேராசிரியர் இளம்பாரதி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.அரசுமாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்,எம்.ஓ மற்றும் செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியின் தாளாளர் மரிய செல்வம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். செவிலிய ஆசிரியை நித்யா நன்றி கூறினார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்