உலக நன்மைக்கான கூட்டமைப்பு: ‘குவாட்’ மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பருவநிலை மாற்றம், தடுப்பூசி, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவை உலக நன்மைகளுக்கான சக்தியாக குவாட் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.‘குவாட்’ எனப்படும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பு கடந்த 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ராணுவ பாதுகாப்பு, கடல்வழி போக்குவரத்து, பொருளாதார உதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து 4 நாடுகளும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும். குறிப்பாக, கடற்படை போர் பயிற்சிகளை குவாட் நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன. முதல் முறையாக இதன் தலைவர்கள் மாநாடு காணொலி வாயிலாக நேற்று தொடங்கியது. இதில், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில் , கடல் போக்குவரத்து, எல்லை பாதுகாப்பு, கொரோனா தடுப்பு மருந்து, பருவநிலை மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பொருளாதார மந்தநிலை குறித்து விவாதிக்கப்பட்டது.உச்சிமாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவை ஊக்குவிக்கப்பட வேண்டும். குவாட் நாடுகள் ஜனநாயக மதிப்பீட்டின் அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளன. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், குவாட் நாடுகள் ஒருங்கிணைந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தடையற்ற முறையில் அர்ப்பணிக்க வேண்டும். மதச்சார்பற்ற, நிலையான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க இணக்கமாக பணியாற்றுவோம். தடுப்பூசிகள், பருவநிலை மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்றவை குவாட் கூட்டமைப்பை உலகளாவிய நன்மைக்கான சக்தியாக உருவாக்கி உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.வாசுதேவ குடும்பம்பிரதமர் மோடி மேலும் கூறுகையில், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதும் இந்தியாவின் பண்டைய தத்துவமான ‘வாசுதேவ குடும்பம்’ என்ற தத்துவத்தின் விரிவாக்கமாகவே குவாட் அமைப்பை கருதுகிறேன்,’’ என்றார்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை