உலக தண்ணீர் தினம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மனித சங்கிலி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வனிதா னிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயலட்சுமி சூர்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராமானுஜம் வரவேற்றார். கூட்டத்தில், குடிநீர் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது. பின்னர், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலி நடத்தினர்.ஊனைமாஞ்சேரி ஊராட்சி கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஜி.மகேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் டில்லி வரவேற்றார். கீரப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஏ.ஜே.கே.பாலாஜி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வரதராஜன் வரவேற்றார். கூட்டத்தில் கோடை காலம் நெருங்குவதால் பைப் லைனில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உரிஞ்சுவதை தடுக்கவும், அனைவரது வீடுகளுக்கும் குடிநீர் பைப் லைன் அமைத்து தருவது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தினர். மாணவியின் விழிப்புணர்வு பிரசாரம்செங்கல்பட்டு புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலா. இவரது மனைவி ஜெய்மதி. இவர்களது மகள் ஜெய்மதிபாலா (8). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று, சிறுமி ஜெய்மதிபாலா, தண்ணீரின் அவசியம், அதன் முக்கியத்துவம், தண்ணீரின் சேமிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புலிப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நகர் முழுவதும் பள்ளி சீருடையுடன், கொளவாய் ஏரிநீர் நிரப்பிய கேன், விழிப்புணர்வு பிரசார வாசகங்களை சைக்கிளில் கட்டிக்கொண்டு சுற்றி வந்து, இறுதியாக, பள்ளியை அடைந்தார். பின்னர், அங்குள்ள மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றி தனது விழிப்புணர்வு பிரசாரத்தை முடித்தார்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்