உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கரூர், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கரூர் தேசிய பசுமை படை சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம்தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி நிகழ்ச்சிக்கான ஏறபாடுகளை செய்திருந்தார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, பசுமை தோழர் கோபால் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்வினை துவக்கி வைத்தனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. மேலும், அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை